Chairman / Founder
DIN: 03535576
அன்புடையீர் வணக்கம்!
உறுப்பினர்கள் அனைவருக்கும் அன்பான வாழ்த்துகள்!
நமது ஸ்ரீ நாராயணி நிதி லிமிடெட்,
“பாரம்பரிய நம்பிக்கையோடு! பாதுகாப்பான முதலீடு!” என்ற ஸ்லோகத்துடன், 2012 ஆம் ஆண்டு திருவாரூர் கமலாலயம் வடகரையில் முதல் கிளையுடன் துவங்கி, ஆலமரம் போல வளர்ந்து இன்று (2025 ஆம் ஆண்டு) சுமார் 70,000 உறுப்பினர்களுடன் கற்பக விருட்சமாய் கடவுள் அருளால் வெற்றி நடை போட்டு, 30.09.2025 நிலவரப்படி மொத்தம் 80 கிளைகளுடன் தமிழ்நாட்டில் மிகச் சிறப்பாக நிதி சேவையில் வளர்ச்சி பெற்று வருகிறது.
நேர்மையான மற்றும் கைராசியான நிறுவனமாக அனைத்து உறுப்பினர்களுக்கும் எவ்வித பாரபட்சமின்றி செயல்பட்டு வருகிறது. சுமார் 500 ஊழியர்கள் மிகுந்த அர்ப்பணிப்புடன் திறம்பட பணியாற்றி வருகின்றனர். விரைவில் 127 கிளைகள் (அதாவது மேலும் 47 கிளைகள்) துவங்க உள்ளன. இவை அனைத்திற்கும் MCA எனும் மத்திய அரசின் பெருகம்பெனிகள் சட்ட விவகாரத்துத்துறை அமைச்சகத்தில் முறைப்படி NDH-2 எனும் படிவம் சமர்ப்பித்து அனுமதி பெறப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில், ஏன், இந்தியாவில் நமது ஸ்ரீ நாராயணி நிதி லிமிடெட் மட்டும் தான் GAZETTE NOTIFICATION மத்திய அரசிடம் பெற்ற ஒரே முதல் நிறுவனம் என்பதை எக்காலமும் (நிதி) நிறுவனங்களில் பெருமையுடன் கூறி கொள்ள கடமைப்பட்டுள்ளோம். சிறந்த நிர்வாக திறன் பெற்ற, ஆற்றல் மிக்க, ஆர்வமான ஊழியர்கள், தலை சிறந்த நிதி நிர்வாக வல்லுநர்கள் கொண்டு இந் நிறுவனத்தை இயங்கி வருகிறோம்.
உறுப்பினர்களுக்கு நியாயமான வட்டி விகிதத்தில் கடன்கள் வழங்கி, நிர்வாகத்தின் இலாபத்தை குறைத்துக்கொண்டு வைப்புத் தொகைகளுக்கு அதிக வட்டி வழங்குவதன் மூலம் உறுப்பினர்களுக்கு நன்மை சேர்க்கப்படுகிறது. சில குறிப்பிட்ட கிளைகளில் பாதுகாப்பு பெட்டக வசதிகள் உள்ளது. மேலும், நவீன மென்பொருள் தொழில்நுட்பம் மூலம் பாதுகாப்பான சேவைகள் வழங்கப்பட்டு வருகின்றன. வங்கிகளுக்கு நிகராக தொழில்நுட்ப சேவைகள் மற்றும் சட்ட விதிமுறைகளுக்குட்பட்ட நிதி சேவைகளை வழங்குவது எங்களின் முக்கிய அடையாளமாகும்.
விரைவில் எங்களது நோக்கம் அதாவது இலக்கு என்பது நிச்சயம் 300 கிளைகள், 2500 ஊழியர்கள், 15,000 கோடி வைப்பு நிதி 12,000 கோடி கடன் வழங்குதல் கூடுதல் 27,000 கோடிகள் மொத்த வியாபாரம் என்ற தொலை நோக்கு பார்வையுடன் அனைத்தும் சொந்த கட்டிடம் இதில் தற்போது சுமார் 23 கட்டிடங்கள் மற்றும் இடங்கள் உட்பட சொந்தமாக உள்ளது என்பதை பெருமையுடன் கூறி கொண்டு 300 கோடிகள் லாபமாக ஈட்ட விரைவில் அதாவது 2035 க்குள். இதனை அடைவது உறுதி என்ற வாக்குறுதியை எல்லாம் வல்ல இறைவன் மேல் நம்பிக்கை வைத்து நமது உறுப்பினர்களின் பேராதரவுடன் நடைபெறும் என்பது நிச்சயம். நம் பாரத தேசத்தின் வளர்ச்சிக்கு நமது ஸ்ரீ நாராயணி நிதி லிமிடெட்டின் பங்கு நிச்சயம் இருக்கும் என்ற தகவலை நான் உறுப்பினர்கள் அனைவருக்கும் மகிழ்ச்சியுடன் தெரிவித்து கொள்கிறேன்.
மத்திய அரசின் NDH-4 GAZETTE NOTIFICATION பெற்ற முதல் நிறுவனமாக நமது ஸ்ரீ நாராயணி நிதி லிமிடெட் திகழ்கிறது என்பதை மீண்டும் ஒரு முறை நமது உறுப்பினர்கள் அனைவருக்கும் மகிழ்ச்சி பெருமிதத்துடன் தெரிவித்து கொள்கிறேன்.
அன்புடன்,
தங்கள் உண்மையுள்ள
S.கார்த்திகேயன்
நிறுவனர் மற்றும் தலைவர்
ஸ்ரீ் நாராயணி நிதி லிமிடெட்.